விபத்துக்குள்ளான 'போயிங் 737 மேக்ஸ் 8' விமானத்தின் கருப்பு பெட்டியை உலக நாடுகளுக்கு அனுப்புவோம் - எத்தியோப்பியா தகவல்.

ஆசிரியர் - Admin
விபத்துக்குள்ளான 'போயிங் 737 மேக்ஸ் 8' விமானத்தின் கருப்பு பெட்டியை உலக நாடுகளுக்கு அனுப்புவோம் - எத்தியோப்பியா தகவல்.

157 பேர் உயிரிழந்த எத்தியோப்பியா விமான விபத்திலும், 189 பேர் உயிரிழந்த இந்தோனேஷியா விமான விபத்திலும் தொடர்புடைய போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒவ்வொரு நாட்டிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இவ்விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் விபத்துக்குள் சிக்கிய போது என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவியான 'பிளாக் பாக்ஸை’ ஆய்வு செய்ய உலக நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக எத்தியோப்பியா தெரிவித்துள்ளது. 

எந்த நாட்டிற்கு அனுப்பப்படும் என்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை. “எத்தியோப்பியாவில் இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் திறன் கிடையாது என்பதை எங்களால் சொல்ல முடியும்.

விமானத்தின் ஒரு தகவல் பதிவு பகுதி சேதம் அடைந்துள்ளது என அந்நாட்டு ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பெரும்பலான நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 சேவையை தடைசெய்துள்ளது. 

அமெரிக்காவில் இவ்வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக அச்சம் கொள்ள தேவையில்லை, நாங்கள் விபத்து தொடர்பாக விசாரித்து வருகிறோம் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Radio
×