அமெரிக்காவை சேர்ந்த ராணுவ அதிகாரி மீது பெண் எம்.பி. கற்பழிப்பு புகார்!
அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2-வது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர்.
18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியாக கலோனல் அதிகாரியாக இருந்தார். 2010-ல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு அரசியலில் குதித்த அவர் செனட் உறுப்பினராக இருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருப்பதாக ஏற்கனவே புகார்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 சதவீதம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு நடக்கும் தவறுகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆயுத படைகள் செனட் துணை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
அதில் உறுப்பினராக உள்ள மார்தாமெக்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனக்கும் செக்ஸ் தொல்லை நடந்ததாக அவர் கூறினார். விமானப்படையில் இருந்த போது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மவுனம் காத்தேன். ஆனாலும் நடந்த சம்பவங்களை சிலரிடம் நான் கூறினேன். ஆயுதப் படைகளில் இது போல நடக்கும் தவறுகளை தடுக்க வேண்டும் என்று கூறினார்.