வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் அடாவடி, எதிா்க்க மக்களை வழிப்படுத்தும் சட்ட உதவி ஆணைக்குழு..
மன்னாா் மாவட்டத்தில் வனவள திணைக்களம், மற்றும் வனஜீவராசிகள் திணைக்க ளம் ஆகியவற்றின் அத்துமீறல்கள் மற்றும் அடாவடியான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சட்ட உதவி ஆணைக்குழுவினால் இன்று விசேட அமா்வு ஒன்று நடா த்தப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1983 ஆம் ஆண்டு முதல் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது அப்பகுதியில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் அப்பகுதி தமக்குரியது என வனவளத் திணைக்களம் உரிமை கோருகின்றது.
இதனால் இதேபோன்று மேலும் பல இடங்களை வன ஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோருகின்றது. மாவட்டச் செயலகத்தின் கணக்கின் பிரகாரம் இவ்வாறு இரு திணைக்களமும் ஆக்கிரமித்துள்ள நிலையில் பல குடும்பங்கள் தமக்கான வாழ்விடத்தை அமைக்க முடியாது
தவிப்பதோடு மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தமது வாழ்வாதார நெருக்கடி யினையும் சந்திக்கின்றனர். இதன் காரணமாக சட்ட உதவி ஆணைக்குழுவின் இணைப்பாளரான ஓய்வு பெற்ற அரச அதிபர் பந்மநாதன் தலமையில் இன்றைய தினம்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடல்பெறவுள்ள து. இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் , வன வளத் திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் , கம நல சேவைத் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் ,
பணிப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர். இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மொத்தம் 368 நடுத்தரக் குளங்கள் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ளபோதிலும் தற்போது 270 குளங்கள் மட்டுமே கமநல சேவைத் மிணைக்களத்தினால் புனரமைத்து
ஆளுகை செய்யப்படுகின்றது. எஞ்சிய 98 குளங்களும் காட்டின் நடுவே உள்ளதனால் அப்பகுதிகள் தமது பிரதேசம் எனத் தெரிவிக்கும் வனவளத் திணைக்களம் அங்கே கானப்படும் குளங்களை புனரமைக்கவோ அல்லது அப்பகுதிக்கு கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகள் செல்லவோ தடைவிதிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.