தன் வினை தன்னை சுடும்… சொந்த நகரத்தையே தரைமட்டமாக்கிய வடகொரிய ஏவுகணை !!
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஒன்றில் தவறுதலாக தனது சொந்த நகரம் ஒன்றையே தாக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா Hwasong-12 என்ற ஏவுகணையின் சோதனையை அண்மையில் நடத்தியதாகவும் அப்போது ஏற்பட்ட கோளாறினால் தவறுதலாக அந்நாட்டின் சொந்த நகரமான டோக்சோனையே அந்த ஏவுகனை தாக்கியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை தாக்குதலில் அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் தொழில் மையங்கள் போன்றவை அளவிற்கு சேதமடைந்துள்ளன புக்சாங் ஏவுதளத்தில் இருந்து வட கிழக்கு திசையில் 24 முதல் 43 மைல்கள் தொலைவிற்கு ஏவுகணை சென்றிருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளின் சோதனை தோல்வி அடையும்போது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த குறிப்பிட்ட சோதனையில் வடகொரியா எந்த விதமான எரிபொருளை பயன்படுத்தியது என்பது தெரியவரவில்லை. இருப்பினும் இச்சோதனை தோல்வி அடைந்தது என்று தெரிந்ததும் கூகுள் எர்த் (Google Earth) மூலம் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தைப் பார்த்தபோது குறிப்பிட்ட பகுதியில் முன் கட்டிடங்கள் இருந்த இடங்கள் காலியாக இருப்பது தெரிந்துள்ளது.
தாக்கப்பட்டதாக கூறப்படும் டோக்சோன் நகரம் தலைநகரான பியோங்யாங்கில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள இந்த நகரத்தில் சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.