SuperTopAds

ஐரோப்பாவிலுள்ள 337 இலங்கையர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை -

ஆசிரியர் - Editor II
ஐரோப்பாவிலுள்ள 337 இலங்கையர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை -

ஐரோப்பிய நாடுகளிலுள்ள 337 இலங்கையர்களை கைது செய்வதற்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.

2017ஆம் ஆண்டு 9 மாத காலப்பகுதிக்குள் வெளிநாடு சென்ற 337 இலங்கையர்களுக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்கு தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் சாட்சியாளர்கள் 337 பேருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2000 இலக்கம் 39 என்ற சிவில் மற்றும் வணிக சட்டத்தின் கீழ் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இத்தாலியில் 36 பேரும், கனடாவில் 21 பேரும், பிரான்ஸில் 14 பேரும், பிரித்தானியாவில் 42 பேரும், அவுஸ்திரேலியாவில் 14 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 35 பேரும், இந்தியாவில் 20 பேரும் சவுதியில் 16 பேரும் குவைத்தில் 17 பேரும் கட்டாரில் 11 பேருக்கும் கைது செய்யப்படவுள்ளனர்.

அவர்களுக்கான அழைப்பாணை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு நீதிமன்றங்களில் இலங்கை சந்தேக நபர் மற்றம் சாட்சிகள் 73 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.