SuperTopAds

விடுதலைப் புலிகளுக்கு பணம் சேர்த்தவர்கள் கைது...?

ஆசிரியர் - Editor II
விடுதலைப் புலிகளுக்கு பணம் சேர்த்தவர்கள் கைது...?

விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக 13 பேர் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Swiss Federal Criminal நீதிமன்றத்தில் கடந்த திங்கட் கிழமை 13 பேர் தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 13 பேரும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும், சுவிட்சர்லாந்து, ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் காலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டியுள்ளனர்.

அப்போது அவர்கள் சுவிட்சர்லாந்தில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக வங்கியில் போலி சம்பள சான்றிதழ்களை காண்பித்து வாங்கியுள்ளனர்.

அதன் மூலம் அவர்கள் சுவிட்சர்லாந்து மதிப்பில் 15 மில்லியன் பிராங்குகளை பெற்றுள்ளனர். அதாவது அமெரிக்க மதிப்பில் $15.3 மில்லியன் டொலர் பணம் பெற்றுள்ளனர்.

இது தற்போது தெரியவந்ததால், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் வங்கியில் பெறப்பட்ட பணங்களை சிங்கப்பூர் மற்றும் துபாய் வழியாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

இப்படி தொடர்ந்து இவர்கள் பணத்தை அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் வந்த மோதலின் போது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அதன் பின் அனுப்பப்ட்ட பணங்கள் முற்றிலும் நிலைகுலைந்தன.

இருப்பினும் குறித்த 13 பேர் மீதும் மோசடி, பொய்யான ஆவணங்கள், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிருந்து அனுப்பட்ட பணங்களை வைத்து தான் அவர்கள் ஆயுதங்கள் வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் சுவிட்சர்லாந்தை பொறுத்தவரையில் தமிழீழ விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கமாக பார்க்கவில்லை, அதைத் தொடர்ந்து இது ஒரு பெரிய போராக பார்க்கப்பட்டாலும், இரண்டு குழுக்களிடையே நடந்த சண்டையாகவே பார்க்கப்படுவதாக ஈழத் தமிழர்களின் சுவிஸ் கவுன்சில் தலைவர் அண்ணா அன்னூர் கூறியுள்ளார்.