500 கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கத் தடை!
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளின் தகவல்களின் அடிப்படையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை.
இவர்களுக்கு மேலதிகமாக சிரியாவைச் சேர்ந்த ஆறு பேரும், இந்திய மற்றும் சீன நாடுகளைச் சேர்ந்த 400 பேரும் நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்கள் தலிபான் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என புலனாய்வுப்பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீசா மறுக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது வீசா விண்ணப்பத்தில் மன்னார், மட்டக்களப்பு வாழ் இலங்கையர்களின் முகவரிகளை குறிப்பிட்டிருந்தனர் என கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நபர்கள் இவர்களை நாட்டுக்குள் அழைத்து வர முயற்சிப்பதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.<