மிக குறுகிய வசதிகளுடன், உலக தரம்வாய்ந்த இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு சாதித்த தமிழன்..
யாழ்ப்பாணத்தில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டுவரும் இருதய சத்திர சிகிச்சை நிபுணா் வைத்திய கலாநிதி முகுந்தன் மேற்கொள்ளும் சத்திர சிகிச்சைகள் உலகின் 1 தர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும்,
கனடா- ரொரன்டோ பொது மருத்துவ மனையின் சத்திர சிகிச்சைகளுக்கு இணையானது என கனடா நாட்டின் இருதய சத்திர சிகிச்சை நிபுணரும், பேராசிாியருமான, றொபேட் ஜேம்ஸ் குசிமனோ கௌரவப்படுத்தியுள்ளாா்.
யாழ்ப்பாணத்துக்கு 4 நாள்கள் பயணமாக வந்திருந்த றொபேட் ஜேம்ஸ் குசிமனோ, இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையை,
அதாவது இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான இருதய மாற்று வழி சத்திர சிகிச்சையை சத்திரசிகிச்சைக் கூடத்தில் இருந்து நேரடியாக அவதானித் தார். இருதய சத்திர சிகிச்சையில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி,
இருதயத்தில் ஏற்படும் கட்டிகளுக்கான நவீன அறுவைச் சிகிச்சை தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியர் குசிமனோ விரிவுரை ஆற்றியிருந்தார்.
இந்த விரிவுரை நிறைவில் அவர் முகுந்தனைப் பாராட்டி, கனடா நாட்டு நாணயம் பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை முகுந்தனுக்கு வழங்கி மதிப்பளித்தார். மருத்துவர் றொபேட் ஜேம்ஸ் குசிமனோ, உலகின் முதல் தர மருத்துவமனைகளில்
ஒன்றாக விளங்கும் ரொறன்டோ பொது மருத்துவமனையின் பீற்றர் முங்க் இருதய சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளராகவும் ரொரான்டோ பல்கலைக்கழகத்தின் சத்திர சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியராகவும் விளங்குகின்றார்.
இவர் 2006 இல் சீனநாட்டு சிங்சியாங் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சீனாவுக்குச் சென்று இருதய சத்திர சிகிச்சைப் பயிற்சிகளை மருத்துவர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
2006 இல் இவர் மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சை படிமுறைகளை 100 மில்லியன் சீனர்கள் தொலைக் காட்சியில் நேரடியாக பார்வையிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக சிங்சியாங் மருத்துவப் பல்கலைக்கழகம் அ
வருக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. யாழ்ப்பாண மருத்துவச் சங்கத் தின் ஏற்பாட்டில் வந்திருந்த ஜேம்ஸ் குசிமனோவுக்கு அனைத் துலக மருத்துக்குழுவின் கனடா நாட்டுக் கிளை அனுசரணை வழங்கியிருந்தது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.