'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய மத போதகர்.
சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலை பார்த்து "எழுந்திரு, எழுந்திரு!" என்று மத போதகர் ஒருவர் கத்துவது போன்ற காணொளி ஒன்று தென்னாப்பிரிக்காவில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. இறந்தவர் மெதுவாக எழந்து நேராக உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் ஆச்சர்யமடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர். ஆனால், நவீன கால அற்புத செயலாக கூறப்படும் இதனை எல்லாரும் நம்பத் தயாராக இல்லை.
தன்னைத்தானே மத போதகர் என்று அறிவித்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பங்கெடுத்ததன் மூலம், மத போதகர் ஆல்ப் லுகா இவர்களை அவரது ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு நடத்துகின்ற தலைவர் குழுவால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளார்.
ஜோகனஸ்பர்கில் இந்த போதகரின் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெளிப்புற இடம் ஒன்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் இறந்தவரை உயிர்பித்தல் நிகழ்வு, இணையதளத்தில் கேலி செய்யப்படுவதோடு, கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. "இவ்வாறான அற்புதங்கள் என்று ஒன்றும் இல்லை," என்று தென்னாப்பிரிக்க கலாசார, மத மற்றும் மொழி உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
"நம்பிக்கை இழந்துளள நமது மக்களிடம் இருந்து பணம் பறிக்க புனையப்பட்டு நிறைவேற்றப்படும் முயற்சிகள் இவை," என்று அது தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்வோரும் தாங்கள் ஏமாற்றப்படுவதாக கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.