மன்னார் இளைஞர்களுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான நேர்முகப்பரீட்சை!!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடந்தோறும் நடைபெறும் இளைஞர்களுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான இளைஞர்களுக்கு இன்றைய தினம் 20-02-2019 காலை 10 மணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது நேர்முகப்பரீட்சைக்கு மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து இளைஞர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இவ் நேர்முகப்பரீட்சைக்கு U.L.A.majeed உதவி பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மன்னார். P. பூலோகராஜ மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மன்னார். K.யசோதரன் உபதலைவர் தேசிய சம்மேளனம். A அமல்ராஜ் ஆங்கிலக் கல்வி வளவாளர் வடமாகாண ஆங்கில கல்வி மையம் மன்னார்.
போன்றவர்களினால் இன்றைய தினம் நேர்முகப் பயிற்சி நடைபெற்று மாலை 2:00 மணிக்கு நிறைவு செய்ய பட்டது இதில் மன்னாரின் ஐந்து பிரதேச செயலக இளைஞர் யுவதிகளும் மொத்தமாக 22 பேர் கலந்து கொண்டிருந்தனர் இதில் 5 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.