SuperTopAds

வவுனியா - இறம்பைக்குளம் பகுதியில் குடும்பப் பெண்ணின் குடுமியை கத்தரித்த இளைஞன்!

ஆசிரியர் - Admin
வவுனியா - இறம்பைக்குளம் பகுதியில் குடும்பப் பெண்ணின் குடுமியை கத்தரித்த இளைஞன்!

வவுனியா - இறம்பைக்குளம் பகுதியில் ஒரு பிள்ளையின் தாயான குடும்பப் பெண்ணின் தலைமுடியை இளைஞன் ஒருவர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்து நட்பு ரீதியில் நீண்டகாலம் பழகிய இளைஞன், குடும்பப் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

குடும்பப் பெண்ணை துன்புறுத்திய இளைஞன் வீட்டுக்குள் புகுந்து தலைமுடியை வெட்டியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனை பொலிஸார் அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதும் இளைஞனின் அச்சுறுத்தல் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் தாக்குதலால் காயமடைந்த குடும்பப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதிலும், இளைஞனைக் கைது செய்ய பொலிசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பின்னர் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத் தலையீட்டில் இருவரையும் அழைத்து சமரசப்படுத்தி, இளைஞனிடம் இருந்த பெண்ணின் சில பொருள்களை திரும்பப் பெற்று பெண்ணிடம் வழங்கியுள்ளனர்.