'ஐ.எஸ்.எஸ்' தீவிரவாத அமைப்பில் இருந்த கனேடியர் நாடு திரும்ப உதவி கோருகிறார்!
நான்காண்டு காலமாக ISIS தீவிரவாத குழுவுக்காக போரிட்டு வந்த கனடா – ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்புவதற்காக அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளார்.
அவர் கடந்த காலங்களில் தீவிரவாத அமைப்புக்கு மற்றவர்களை ஆட்சேர்ப்பு செய்ய சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த மொஹம்மட் அல் என்ற குறித்த இளைஞர் தனது நிலை பற்றி கூறுகையில், இஸ்லாமிய ராச்சிய தீவிரவாத குழுக்கள் தங்களில் இருக்கின்ற வௌிநாட்டு போராளிகளை கைவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பின்புலமுடைய குர்திஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் பின்வாங்கி வருகின்றமையை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
28 வயதான குறித்த கனடா இளைஞரின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் சிரியாவில் தங்கியிருந்து இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாகவும், அங்கு அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஏன் கனடாவுக்கு செல்ல கூடாது? நான் கனடாவில் எதனையும் தவறாக செய்யவில்லை, அங்கு எந்த சட்டத்தையும் மீறவில்லை” என்று அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கூறியுள்ளார்.