SuperTopAds

நாளை கிடைக்கும் மன்னார் புதைகுழி காபன் பரிசோதனை அறிக்கை!

ஆசிரியர் - Admin
நாளை கிடைக்கும் மன்னார் புதைகுழி காபன் பரிசோதனை அறிக்கை!

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் குறித்த ஆய்வு அறிக்கை, நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கை, 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 144ஆவது நாளாக இன்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

இன்றைய தினம் அகழ்வுப் பணிகளின்போது சுமார் 40ற்கும் மேற்பட்ட பொலிஸார் பயிற்சி பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு வருகை தந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.