SuperTopAds

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

ஆசிரியர் - Editor II
கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

தன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் கிம் ஜோங் வட கொரியாவின் அணு ஆயத ஏவுகணையை செலுத்தும் பொத்தான் தன் மேஜையில்தான் எப்போதும் உள்ளது என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறாக டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

மரபுகளை மீறிய ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகளுக்கு ஏராளமானோர் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றி உள்ளனர்.

அணுஆயுதம் என்பது விளையாட்டு பொருள் அல்ல. எங்கள் மேஜையில் அணு ஆயுதத்தை செலுத்தும் பொத்தான் இருக்கிறது என்று தற்பெருமை கொள்ளாதீர்கள் என்ற தொனியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்கள்.

அதே நேரம், டிரம்ப் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள்.

டிரம்ப் சொல்வது அனைத்தும் உண்மையானது; அமெரிக்காவின் பலத்தை அது காட்டுகிறது" என்ற தொனியில் உள்ளன அந்த பதிவுகள்.

டிரம்ப்பின் கருத்தை கிண்டல் செய்தும் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்கள்.