SuperTopAds

10 வருடங்களின் பின்னா் மன்னா் சைவ மங்கையா் கழக கட்டிடம் விடுவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
10 வருடங்களின் பின்னா் மன்னா் சைவ மங்கையா் கழக கட்டிடம் விடுவிக்கப்பட்டது..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சைவ மங்கையா் கழகத்திற்கு சொந்தமான கட்டிடம் மன்னாா் மாவட்ட செயலா் திருமதி கனகாம்பிகை சிவா ந ந்தினியால் சைவ மங்கையா் கழகத்திடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 

1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், பெண்களின் வாழ்வியலை பாதுகாத்து முன்னேற்றும் நோக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், கண வனை இழந்த பெண்கள், 

பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு பெண்குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது.போ ர் காரணமாக கழகக் கட்டிடம் மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்தது. 1990 தொடக்கம் 2009 வரை இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 

2009 நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்ட நிலையில் சைவமங்கையர் கழக தலைவியால் ஜனா திபதி மற்றும் வடமாகான ஆளுநரிடம் கழகக் கட்டடத்தை இராணுவத்திரிடமிருந்து பெற்றுத் தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தார்.

ஜனாதிபதியின் தனியார் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக , குறித்த கட் டடங்கள் விடுவிக்கப்பட்டன. அவற்றை உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளர் திருமதி க னகாம்பிகை சிவசம்பு கழக தலைவியிடம் ஒப்படைத்தார்.

நிகழ்வில் மன்னார் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தர் வசந்தன், கிராம அலுவல ர்களின் பொறுப்பாளர் ராஜா, கிராம அலுவலர் சுந்தர சேனா மற்றும் திருக்கேதீஸ்வரம் ஆலய த்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கட்டடங்கள் அமையப்பெற்ற காணி ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஒரு சிறிய பௌத்த குருமடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது விகாராதிபதிகளுடடன் கலந்துரையா டி குமடம் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.