SuperTopAds

எல்லைகள் மூடப்பட்டால் அமெரிக்க உதவிகள் எவ்வாறு கிடைக்கும் : வெனிசுலா மக்கள் கேள்வி!

ஆசிரியர் - Admin
எல்லைகள் மூடப்பட்டால் அமெரிக்க உதவிகள் எவ்வாறு கிடைக்கும் : வெனிசுலா மக்கள் கேள்வி!

ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோவின் அரசாங்கம் கொலம்பிய எல்லை வழியாக மனிதாபிமான உதவிகள் வருவதை தடுக்குமாயின் எவ்வாறு அமெரிக்க உதவிகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வெனிசுலாவை வந்தடையும் என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

இந்த கேள்வியை முன்வைத்து பொதுமக்கள் சிலர் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர். வெனிசுலாவில் பரவலாக பட்டினி மற்றும் பிரதான உணவுப் பொருள் பற்றாக்குறை இருந்த போதிலும் அமெரிக்க உதவிகளை மடுரோ திருப்பியனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் கடந்த மாதம் எதிர்த்தரப்புத் தலைவர் ஜுவான் குயெயிடோவை தென் அமெரிக்க தேசத்தின் இடைக்கால ஆட்சியாளராக அங்கீகரித்த பின்னரே அமெரிக்க உதவிகளை திருப்பியனுப்புவதற்கு மடுரோ சபதம் எடுத்திருந்தார்.

வெனிசுவேலாவின் பாதுகாப்பு படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கொலம்பிய நகரான குகுடாவின் மூன்று வழி எல்லைப் பாதையை மூடியுள்ளனர். இதற்காக அவர்கள் இரண்டு கப்பல் கொள்கலன்களையும், எரிபொருள் தாங்கி வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, ஆயுதந் தாங்கிய வெனிசுவேலா படையினர் சுங்கத்துறை கட்டிடத்தின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்ததுடன், எல்லையை கடப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் முறியடிப்பதற்கு பாதுகாப்பு துறையினர் உறுதியளித்துள்ளனர்.