தரையில் உருண்டபடி மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை பயணம்!
அனைத்து மக்களும் இன, மத, பேதம் இன்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தி, மன்னார் தள்ளாடியில் இருந்து அநுராதபுரம் வரை தரையில் உருண்டு செல்லும் நல்லிணக்க முயற்சியில் ஒருவர் ஈடுபட்டு வருகின்றார். மன்னாரைச் சேர்ந்த (38 வயது) அன்ரன் கிருஸ்ணன் டயஸ் என்பவரே இன்று காலை தொடக்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஆன்மீக மற்றும் ஆயுர்வேத, சித்த மருத்துவ ரீதியில் தேர்ச்சி பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. நாள் ஒன்றிற்கு சுமார் 5 கிலோ மீற்றர் தரையில் உருண்டு செல்ல தீர்மானித்துள்ள அவர், எதிர்வரும் 40 நாட்களில் திருகேதீஸ்வரம், மடு ஊடக அனுராதபுரத்தை சென்றடைந்து தனது நல்லிணக்க பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுமக்கள் பலர் இந்த முயற்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றனர்.