"வெனிசுவேலா அகதிகளுக்கு 53 மில்லியன் நிதி உதவி" - பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!
வெனிசுவேலாவில் அதிகரித்துவரும் அகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றின் போது பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார். அதிகரித்துவரும் கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக அண்மைக் காலங்களில் அண்டை நாடுகளில் குடியேறிய மக்களுக்கு உதவும் வகையிலேயே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு கனடா இதற்கு முன்னர் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியிருந்தது. இந்நிலையில் அதற்கு மேலதிகமாக தற்போது 53 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.