நானும் பத்திரிக்கையாளன் தான்… தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்; ரஜினிகாந்த் !!
பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது என்பது மட்டும் தனக்கு தெரியவில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டி, தொடர்ந்து இழுத்தடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
மேலும் ஆண்மிக அரசியல் தான் முன்னெடுக்க உள்ளதாகவும், விரைவில் கட்சி பெயர் மற்றும் கொடி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த தினமே அதற்கான இணையதளம் மற்றும் கூகுள் செயலியை வெளியிட்டு தான் இப்போது முழு நேர அரசியல்வாதி என்பதை காட்டிக்கொண்ட ரஜினி, இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து தான் மட்டும் பேசிய ரஜினி, தனக்கு பத்திரிக்கையாளர்களை எப்படி எதிர்கொள்வது எப்படி என்பது மட்டும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ரஜினிகாந்த் “பத்தாம் வகுப்பு முடிவில் நானும் பத்திரிக்கை துறையில் ஃப்ரூப் ரீடராக (பிழை திருத்துதல்) பணியாற்றினேன். நான் தவறு ஏதும் செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள், என்னை உலகும் முழுவதும் கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது” என்றும் தெரிவித்துள்ளார்.