SuperTopAds

பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூலா் வாகனம், சோதனையிட்டபோது அதிா்ச்சியடைந்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூலா் வாகனம், சோதனையிட்டபோது அதிா்ச்சியடைந்த பொலிஸாா்..

மன்னாா்- மூா் வீதியில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூலா் வாகன த்திற்குள்ளிருந்து பெருமளவு பீடி இலைகளை மன்னாா் பொலிஸாா் இன்று கைப்பற்றியுள்ளனா். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 

மன்னார் மூா்வீதியில் உள்ள பள்ளிவாசல்  வளாகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி இன்று வியாழக்கிழமை காலை கூலர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வாகனத்தை உரியவர்கள் அவ்விடத்தில் இருந்து நீண்ட நேரமாக எடுத்துச் செல்லாத நிலையி ல்,குறித்த மதஸ்தலத்தின் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் 

மன்னார் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கினர். இந்த நிலையில் உடனடியாக மன்னார் காவல்துறையினர் குறித்த மதஸ்தலத்திற்கு வருகை தந்து குறித்த வாகனத்தை பார்வையிட்டுள்ளனர். 

மேலும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாகியும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் வாகனத்தை மன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர் அங்கு வாகனத்தினை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் காணப்பட்ட ரெஜிபோம் பொட்டிகளில் 17 பொதிகளை கொண்ட பீடி சுற்றும் இலை களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குறித்த இலைகள் 479 கிலோ கிராம் நிறை கொண்டது என காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பீடி சுற்றும் இலைகள் சட்ட விரோதமாக கொண்டு செல்லுவதற்காக 

பதுக்கி வைத்திருக்கலாம் என காவல்துறையினர்   சந்தேகம் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தை யாரும் உரிமை கோராத நிலையில் மன்னார் காவல்துறையினர் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது