SuperTopAds

காற்று மாசு காரணமாக தாய்லாந்தில் பாடசாலைகள் மூடல்!

ஆசிரியர் - Admin
காற்று மாசு காரணமாக தாய்லாந்தில் பாடசாலைகள் மூடல்!

தாய்லாந்து தலைநகரின் அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் இரு தினங்களுக்கு மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தலைநகரின் மிகப்பெரிய நகரான பங்கொக், வளி மாசினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வளி மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையிலும், பெற்றோரினால் தனியார் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வளி மாசு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இவ்வார இறுதிக்குள் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மோசமடைந்துவரும் வளி மாசை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கை குறித்த பிரதமரின் பணிப்புரைக்கு அமைய அமைச்சரின் இக்கருத்து வெளியாகியுள்ளது. மேலும், இந்நிலை தொடரும் பட்சத்தில் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.