"ரொறன்ரோவில் அதிக பனிப்பொழிவு நாளாக பதிவு!" - மக்களுக்கு கடும் குளிர் எச்சரிக்கை!
ரொறன்ரோவில் கடுமையான குளிர் காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று குறித்த பகுதியில் பதிவாகிய பனிப்பொழிவு, நாட்டில் ஏற்பட்ட அதிக பனிப்பொழிவாக பதிவாகியுள்ளது. குளிரான காற்று மற்றும் கடும் வலுவான காற்றலைகள் இந்த வார ஆரம்பத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வரை -30 முதல் -35 வரை பதிவாகியுள்ள அதேவேளை அங்கு கடும் குளிர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் காலநிலை -9 C ஆகி இருந்த போதும் இரவு -30 ஆக பதிவாகியது. இதன் போது காலை 10 மணியளவில், நகரில் 33 செ.மீ பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது.
மேலும் திங்கட்கிழமை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 26.4 சென்டிமீட்டர் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது. இதே நாளில் இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் 13.4 சென்டிமீட்டர், என்ற அளவுக்கு பதிவு செய்யப்பட்தே அதிகம் என கனடா சுற்றுசூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ரொறன்ரோவில் 51 ஆண்டுகளுக்கு முன்னரே 20 செ.மீ பனிப்பொழிவும், ஜனவரி 23, 1966 இல் 36.8 சென்டிமீட்டர், ஜனவரி 3, 1943 இல் 27.9 சென்டிமீட்டர் என்றும் பதிவு செய்யப்பட்டது என கனடா சுற்றுசூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.