SuperTopAds

பிரேசில் வெள்ளப்பெருக்கு: பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
பிரேசில் வெள்ளப்பெருக்கு: பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி!

தென்கிழக்கு பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட அனர்த்தத்தை, அந்நாட்டு ஜனாதிபதி ஜயர் பொல்சனாரோ நேரில் பார்வையிட்டுள்ளார். ஹெலிகொப்டர் மூலம் நேற்று (சனிக்கிழமை) அப்பகுதிக்குச் சென்ற அவர், நிலைமையை நேரில் பார்வையிட்டுள்ளார். 

புருமாடின்ஹோ நகருக்கு அருகில் இரும்பு மற்றும் தாது சுரங்கம் காணப்படும் பகுதியிலுள்ள அணை நேற்று முன்தினம் உடைப்பெடுத்தது. சம்பவத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதோடு, 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் வெள்ளம், சேறு என நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆரம்பத்தில் 300 பேர்வரை காணாமல் போனதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், காணாமல் போனோரை உயிருடன் மீட்க காணப்படும் சாத்தியங்கள் குறைவாகவே உள்ளதென அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பிரேசிலின் மிகப்பெரிய சுரங்க நிறுவனம் ஒன்றிற்கு இந்த அணை சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது.