தென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு
தென்கொரியா நாட்டின் கடல் பகுதிக்கு மேலாக பறக்கும் அனுமதி பெறாத விமானங்கள் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தும் வகையில் அதிநவீன ரேடார்களை அமைக்க தென்கொரியா தீர்மானித்தது. இந்த முடிவுக்கு ஜப்பான் அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால், இருநாடுகளுக்கும் இடையில் சில முக்கிய பேச்சுவார்த்தைகளை ஜப்பான் நிறுத்தி விட்டது. இந்நிலையில், ஜப்பான் நாட்டு கடற்படையை சேர்ந்த ஒரு விமானம் தங்கள் நாட்டின் போர்க் கப்பலை குறிவைத்து வட்டமிட்டதாக இன்று குறிப்பிட்ட தென்கொரியா அரசு, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.