நியூயார்க் தாக்குதலில் தப்பியவர் கென்ய தாக்குதலில் மரணம்!

ஆசிரியர் - Admin
நியூயார்க் தாக்குதலில் தப்பியவர் கென்ய தாக்குதலில் மரணம்!

2001 செப்ரெம்பர் 11ல் நியூயார்க் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்பிண்ட்லர்(40) என்ற தொழில் அதிபர் , கென்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

கென்யா தலைநகர் நைரோபியில் நேற்றுமுன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இதில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டலில் தங்கியிருந்த ஜேசன்ஸ் பிண்ட்லரும் உயிர் இழந்தார். அவருக்கு அடுத்த வாரம் தான் 41 வயதாக உள்ளது.ஐ தேவ் இண்டர்நேஷனல் என்ற பெயரில், முதலீடுகள் குறித்த ஆலோசனை அளிக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஸ்பிண்ட்லர், மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிறுவனத்தை துவக்குவதற்கு முன்னர், நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து வந்தார். தலிபான் பயங்கரவாதிகள் நியூயார்க்கின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்திய அன்று, அவர் பணிக்கு காலதாமதமாக சென்றதால், அவர் உயிர் பிழைத்ததாக அவரது பெற்றோர் கூறி உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு