6.6 ரிக்டர் அளவில் வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பசுபிக் பெருங்கடலிலுள்ள வானுட்டு தீவில் இன்று (புதன்கிழமை) 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 47 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லையென பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
வானுட்டு தீவுகள் பசுபிக் பெருங்கடலில் ‘ரிங் ஆப் பயர்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் பெரிய பூகம்பங்களும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.