புதூர் துப்பாக்கி மீட்பு சம்பவம் இதுவரை 7 பேர் கைது, தேடுதல் தொடர்வதாக கூறும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
புதூர் துப்பாக்கி மீட்பு சம்பவம் இதுவரை 7 பேர் கைது, தேடுதல் தொடர்வதாக கூறும் பொலிஸார்..

புதுர்ப் பகுதியில் கைப்பற்றிய கைத் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையில் 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா புதூர்ப் பகுதியில். சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய ஒருவரை பொலிசார் தேடிச் சென்ற சமயம் பொலிசாரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கி எறிந்துவிட்டுத் தப்பியோடிய சமயம் பையில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 4 எறிகுண்டு,  

2 கைத் தொலைபேசி என்பன கடந்த 1ம் திகதி கனகராயன்குளம் பொலிசார்  மீட்கப்பட்டதாக  அறிவித்திருந்தனர். இதனையடுத்து மறுநாள் 2ம் திகதி தொடக்கம் புதுர்ப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்படுகிறது. 

இதில்  கனகராயன்குளம் புதுக்குளம் பகுதியில் பண்டிதமனி கணபதிப்பிள்ளை வித்தியாசாலையில் சமையல் பணியில் ஈடுபட்ட 35 வயதினையுடைய சிறீக்காந் - தர்சினி என்னும் ஒரு பிள்ளையின் தாயாரும் அவரது  10 வயதுச் சிறுமி  ஆகிய இருவரும்  கைது செய்யப்பட்டனர் . 

புதூர்ப் பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடியவருக்கு உணவு வழங்கினார் எனத் தெரிவிக்கப்படும் குறித்த பாடசாலை சமையலாளரை கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் வடக்கின் பல பகுதிகளிலும் குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இறுதியாக மன்னாரில் நேற்று முன்தினம் ஜோன்போல் என்னும் 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேநேரம் மன்னார் மாவட்டம் பண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த கடந்த 9 ம் திகதியும் ஓர் இடத்தில் மறைத்து வைத்திருந்ததாக கூறி ஒரு துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு