SuperTopAds

போதிய வருமானம் இருந்தும் உள்ளக வீதிகளின் புனரமைப்பில் பாராமுகமாக இருக்கும் மாந்தை மேற்கு பிரதேசசபை..

ஆசிரியர் - Editor I
போதிய வருமானம் இருந்தும் உள்ளக வீதிகளின் புனரமைப்பில் பாராமுகமாக இருக்கும் மாந்தை மேற்கு பிரதேசசபை..

மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட உள்ளக வீதிகள் மிக நீண்டகாலம் புனரமைப்பு செய்யப்படாமலிருப்ப தாக கூறும் பிரதேச மக்கள், பிரதேசசபைக்கு போதுமான வருமானம் வரும்போதும் குறித்த வீதிகளை புனரமைப்பு செய் யாமல் வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். 

இது குறித்து கூராய், சீது விநாயகா்களம், ஆத்திமோட்டை, இலுப்பக்கடவை ஆகிய கிராமங்களை சோ்ந்த மக்கள் ஊடக ங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,  குறித்த பகுதியிலிருந்து மாதமொன்றிற்கு மண் அகழ்வுகளில் இருந்து பல இலட்சம் ரூபாய் வருமானம் பிரதேச சபைக்கு கிடைத்தாலும் 

குறித்த வீதியினை புனரமைப்பதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபை, கிராமங்களின் வீதி அபிவிருத்தி தொடர்பில் அக்கரை செலுத்தவில்லை என குற்றம் சுமத்திய பிரதேச சபை உறுப் பினர் எம்.விஜயபாகு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்களினால் மழை காலங்களில் வீதிகளில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டமையினால் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான 

இயந்திர உபகரணங்களை கிராம பகுதிக்குள் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீதிகள் சேதமடைந்துள்ளன. மேலும் வீதி சேதமடைந்து காணப்படுகின்றமையினால் மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பிரதேச தவிசாளர் மற்றும் பிரதேசசபை அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் சார்பாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.