SuperTopAds

இலங்கை இராணுவத்தின் மிலேச்சத்தனமான வங்காலை துாய அனாள் ஆலய படுகொலையின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

ஆசிரியர் - Editor I
இலங்கை இராணுவத்தின் மிலேச்சத்தனமான வங்காலை துாய அனாள் ஆலய படுகொலையின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

மன்னாா் வங்காலை துாய அனாள் ஆலயத்தில் இலங்கை இராணுவத்தினால் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்ப ட்ட  அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் வங்காலை தூய ஆனாள் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

மன்னார் வங்காலையில் 1985ஆம் ஆண்டு தை மாதம் 06ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்குப் பணியாளராகச் சேவையாற்றிய அருட்பணி மேரிய பஸ்ரியன் அடிகளாரும், 

அவருடன் தங்கியிருந்த சிறுவர்களும், உதவியாளர்களும் பொது மக்களுமென 10 பேர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியனின் அடிகளார் மற்றும் மக்களின் நினைவு அஞ்சலி வருடா வருடம் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் நடாத்துப்பட்டு வருகின்றது.