இராணுவத்தின் வேலை நாட்டை பாதுகாப்பதா..? விவசாயம் செய்வதா..? செட்டிகுளம் மக்கள் போராட்டம்..
இராணுவத்தின்வசம் உள்ள தமது விவசாய காணிகளை மீட்டுத்தரவேண்டும் எனவும் தமது காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேறவேண்டும். எனவும் வலியுறுத்தி செட்டிகுளம்- ஆண்டியா புளியங்களும் இரமியங்குளம் மக்கள் போராட்டம் ஒன்றை நடாத் தியுள்ளனா்.
மதவாச்சி- இரமியன்குளம் பகுதியில் நேற்று இந்த ஆா்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆா்ப் பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் “இராணுவம் நாட்டை பாதுகாப்பதற்கா? எமது காணிகளில் விவசாயம் செய்வதற்கா? என கேள்வி எழுப்பியதுடன் இடம்கொடுத்து இன்று அகதிகளாகி நிற்கிறோம் எனவும்,
“இராணுவமே சொந்த நிலத்தில் வாழவிடு” எனவும் கோஷங்களை எழுப்பியவாறும் பதா கைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். மேலும் செட்டிகுளம் பிரதேச செயலரை சந்தித்து மகஜா் ஒன்றினையும் மக்கள் கையளித்துள்ளனா்.