மெக்சிகோவில் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்

ஆசிரியர் - Admin
மெக்சிகோவில் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்

மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேயர் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேயர் உயிரிழந்தார். மறுநாள் மற்றொரு நபர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவில், கடந்த 2017 ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 175 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Radio
×