SuperTopAds

கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அரசாங்கம், அரச அதிகாரிகள். தினசரி அல்லல்படும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அரசாங்கம், அரச அதிகாரிகள். தினசரி அல்லல்படும் மக்கள்..

மன்னார் மாவட்டத்திலிருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்லும் காட்டுபாதை மிக நீண்டகாலம் எந்த புனரமைப்பும் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த வீதியால் பயணம் செய்யும் மக்கள் மிக சிரமங்களை தொடர்ச்சியாக எதிர் கொண்டவண்ணம் உள்ளனர். 

இந்த வீதி வடமாகாணத்திலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு செல்வதற்கு இலகுவான பாதையாக காணப்படுகின்றது. எனினும் மிக நீண்டகாலம் எந்த புனரமைப்பும் செய்யப்படாமல் இருப்பதனால் மழைகாலங்களில் இந்த வீதி ஊடான போக்குவரத்தில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். 

தொடர்ச்சியாக வாகனங்கள் சேற்றில் புதைவதும், வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் என மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. இந்நிலையில் தினசரி இந்த வீதியை வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என பலர் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக மன்னார் மடு தேவாலய உற்சப காலம் உற்றிட்ட பண்டிகை காலங்களில் இந்த வீதியை பெருமளவான மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வீதியின் புனரமைப்பு தொடர்பாக அரசாங்கம் இன்றளவும் கவனயீனமாக இருந்து கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் பொறுப்புவாய்ந்தவர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்த வீதி புனரமைப்பு விடயத்தில் கூடியளவு கரிச னை காட்டுவதன் ஊடாக இந்த வீதியை புனரமைப்பு செய்யவேண்டும் என மக்கள் தொடர்ந்தும் கேட்டு வருகின்றனர். 

படங்கள்:- புதுவெளி ஜவாத்