SuperTopAds

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் காபன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு.. கொல்லப்பட்ட காலத்தை கணிக்க முடியுமாம்.

ஆசிரியர் - Editor I
மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் காபன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு.. கொல்லப்பட்ட காலத்தை கணிக்க முடியுமாம்.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரிகள் காபன் டேட்டிங் பரி சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில்,

குறித்த பரிசோதனைக்கான நிதியை வழங்க காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் முன்வந் திருக்கின்றது. 

மன்னார் மனித புதைகுழியிலிருந்து ரேடியோ கார்பன் டேட்டிங் பரிசோதனைகளிற்காக ஆறு எலும்பு மாதிரிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை 

பார்வையிட்டுவந்துள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது ரேடி யோ கார்பன் டேட்டிங் முறை மூலம் எலும்பு மற்றும் பல் மாதிரிகளில் 

உள்ள  கார்பன் 14 இன் அளவினை கணக்கிட்டு குறிப்பிட்ட மனித உடலிற்கு சொந்தமானவர் உயிருடன் காணப்பட்ட காலத்தை கணிப்பிட முடியும்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த ஆய்விற்காக தொல்பொருள் தடயவியல் விஞ்ஞான துறைகளில் இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகின்றது.

மன்னார் மனித புதைகுழியில் காணப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை பொம் பிளஸ் கார்பன் 14 என்ற ஆய்விற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட மனித எச்சங்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரானவை எனின்  பொம் பிளஸ் கார்பன் 14 ஆய்வின் மூலம் எக்காலத்தில் மரணங்கள் நிகழ்ந்தனை 

என்பதை கண்டுபிடிக்க முடியும். மன்னார் மனித புதைகுழியின் பல்வேறு பகுதிகள் மற்றும் செங்குத்து அடுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் 

ஆறு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன மன்னார் மனித புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் முழுமையான எலும்புக்கூடுகளாகவும் தனியான எலும்புகளாகவும் மீட்கப்பட்டிருந்தன

முழுமையான எலும்புக்கூடுகளிற்காக பல்மற்றும் எலும்பு முனையின் ஒரு பகுதி ஆகியன தெரிவு செய்யப்பட்டன.

எலும்புகள் மாத்திரம் காணப்பட்ட மனித எச்சங்களில் தொடை எலும்பு மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர் சுத்தம் செய்யப்பட்டு சீல்வைக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன

இந்த மாதிரிகள் ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் முடிவுகள் வெளியான பின்னர் விசாரணையாளர்கள் குழு 

மன்னார் நீதிமன்றத்திற்கு ஆரம்பகட்ட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்.