SuperTopAds

மீதமிருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை துருக்கி அரசு அழிக்கும்: - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஆசிரியர் - Admin
மீதமிருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை துருக்கி அரசு அழிக்கும்: - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

சிரியாவில் மீதம் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழித்து விடுவோம் என்று துருக்கி அரசு உறுதி அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் இஸ்லாமிக்ஸ் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமரிக்க ராணுவமும் இணைந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக ஏராளமான அமெரிக்க ராணுவ வீரர்கள் சிரியாவில் சண்டையிட்டு வந்தனர்.

இந்த சூழலில் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தார். ட்ரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 

எனினும் ராணுவ வீரர்கள் நாடு திருப்புவதற்கான உத்தரவு முறைப்படி கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிரியாவில் மீதம் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளையும் அளித்து விடுவோம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் உறுதி அளித்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே, அமெரிக்க பொறுப்பு பாதுகாப்புத் துறை அமைச்சராக ஷனாகன் பாட்ரிக் செயல்படுவார் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக ஜிம் மேட்டிஸ் அறிவித்தார். 

சிரியாவில் இருந்து படைகளை வாபஸ் பெரும் முடிவில் உடன்பாடு இல்லாததால் தான் டர்ஹான் ஜிம் மேட்டிஸ் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பாட்ரிக் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பொறுப்பு பாதுகாப்புத் துறை அமைச்சராக செயல்படுவார் என்று அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பள்ளம் பனிக்கட்டிகளால் நிறைந்திருப்பதாகவும், 1.8 கி.மீ. அடர்த்தியுடன் இந்த பனிக்கட்டிகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோரோலேவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தின் அருகில் உள்ளது.