SuperTopAds

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பின் கீழ் பாரிஸ் நகரம்!

ஆசிரியர் - Admin
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பின் கீழ் பாரிஸ் நகரம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் இன்றும், நாளையும் பாரிஸ் நகரம் முழுதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் என காவல்துறை தலைமை செயலகம் அறிவித்துள்ளது. பிரான்சில் கடந்த சில வாரங்களாவே மஞ்சள் ஆடை போராட்டம் தீவிரமடைந்துள்ளது, வார இறுதியில் நடத்தப்படும் இப்போராட்டத்தால் பாரிஸ் நகரமே ஸ்தம்பித்தது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்கள், கடைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதமேந்திய நிலையில் வலம் வரும் பொலிசார், சந்தேகம் இருப்பவர்களின் அடையாள அட்டைகளை சோதனையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர Notre-Dame தேவாலயம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும் எனவும் இதற்காக சிறியரக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.