சசிகலாவின் உறவினவிர் வீடுகளில் மீண்டும் ரெய்டு.! முக்கிய ஆவணங்கள் சிக்கும் என வருமான வருவாய்துறை தகவல்.!!
தமிழகத்தில் கடந்த மாதம் சசிகலாவின் உறவினர்கள் வீடுகள், நிறுவனங்கள் என மொத்தம் 150 க்கும் மேற்பட்ட இடங்களில்வருமான வரிதுறையினர் மெக ரெய்டு நடத்தினர்.
அப்போது கணக்கில் வராதா ரூ.1700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் அங்கிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள்,நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்
இந்நிலையில் மீண்டும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரிதுறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.
இளவரசியின் மருகனுக்கு சொந்தமான சென்னை அடையாற்றில் உள்ள கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஓவ்வொரு இடத்திலும் சுமார் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இந்த சோதனை நாளையும் நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இன்னும் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.