நேபாளத்தில் மாணவர்கள் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: - 23 பேர் பலி
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள கிருஷ்ணா சென் இச்குக் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் கல்விச் சுற்றுலா சென்று இருந்தனர்.பல இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலைப் பாதையில் ராம்ரி கிராமம் அருகே வந்தபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் இருந்த 1,640 அடி பள்ளத்தாக்கில் தலைகீழாக கவிழ்ந்தது.. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மாணவர்களும்- கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.
இவர்கள் தவிர படுகாயமடைந்த சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். நேபாளத்தில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த வாரம் மலைப் பாதையில் பஸ் உருண்டதில் 16 பேர் பலியாகினர். அங்குள்ள மோசமான ரோடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன.