பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு - 14 ஆயிரம் வீடுகள் இருளில்
பிரித்தானியாவில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவினையடுத்து, சாரதிகள் மற்றும் மக்களை கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகப்படியான பனிபொழிவினால், மிட்லான்ட் உட்பட பல பகுதியில் 14 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.
வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து காண்ப்படுகின்றமையினால் போக்குவரத்திற்கு மிகவும் அபாயகரமான நிலைமை காணப்படுகின்றது.
எனவே விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், சாரதிகளை கவனமாக வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வடகிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக, பிரித்தானியாவின் வானிலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவின் வெள்ள அனர்த்த முகாமைத்துவ பிரிவு, வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் எச்சரி்த்துள்ளது.
அத்துடன் அதிகப்படியான பனிப்பொழிவினால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.