அமெரிக்க படை சோமாலியா மீது வான்வெளி தாக்குதல் - இரு நாட்களில் 60 கிளர்ச்சியாளர்கள் பலி.

ஆசிரியர் - Admin
அமெரிக்க படை சோமாலியா மீது வான்வெளி தாக்குதல் - இரு நாட்களில் 60 கிளர்ச்சியாளர்கள் பலி.

சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது. இந்நிலையில், சோமாலியா நாட்டில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 34 பேர், நேற்று நடத்திய தாக்குதலில் 28 பேர் என மொத்தம் 62 அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு