மன்னாா் மாவட்டத்தில் கிராமங்களுக்குள் நுழையும் கடல்நீா். அச்சத்தில் உறையும் மக்கள்..
மன்னாா் மாவட்டத்தில் சுமாா் 7 கிராமங்களுக்குள் கடல் நீா் புகுந்துள்ளமையினால் குறித்த கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனா்.
இது குறித்து யாழ்.வலயம் செய்தி சேவையின் மன்னாா் செய்தியாளா் மேலுதிக தகவல் தருகையில், மன்னாா் பிரதேச செயலக பிாிவுக்குட்பட்ட பகுதியல் இன்று காலை 6 மணியில் இருந்து,
கடல் நீா் உட்புகுந்து கொண்டிருக்கின்றது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், சௌத்பார், எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு, மேற்கு
ஆகிய கிராமங்களினுள் கடல் நீர் படிப்படியாக செல்ல ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. மன்னார், புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே
கடல் நீர் கிராமங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் கிராம அலுவலகர்கள்,
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். எனினும் இந்த விடயம் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும்
எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கிராமங்களுக்குள் கடல் நீர் வருவதை கட்டுப்படுத்தாது விட்டால் வீடுகள் அனைத்தும்
கடல் நீரால் ஆக்கிரமிக்கப்படும் அபாய நிலை ஏற்படலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.