பிரித்தானிய கடற்பரப்பில் ரஷ்ய நாட்டு யுத்தக்கப்பல்!
ரஷ்யாவிற்கு சொந்தமான யுத்தக்கப்பல் ஒன்று பிரித்தானிய கடற்பரப்பிற்கு அண்மையில் சென்றுள்ளதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை, பிரித்தானியாவிற்கு சொந்தமான யுத்தக்கப்பல் ஒன்று கண்காணித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அட்மிரல் கோர்ஷோவ் எனும் ரஷ்ய நாட்டின் யுத்தக்கப்பல் நத்தார் தினத்தன்று இவ்வாறு பிரித்தானிய கடற்பரப்பிற்கு அண்மையில் சென்றுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கடல் எல்லை வழியாகச் செல்லும் ரஷ்யப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமது கடல் எல்லைகளைக் பாதுகாக்க தயங்கமாட்டேன் எனவும், அதற்காக எவ்விதமான அச்சுறுத்தலையும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு செயலர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவிற்கு அருகே உள்ள வடக்குக் கடல் மற்றும் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் ஒரு ரஷ்ய உளவுக் கப்பல் சென்றுள்ளது.
இதனையடுத்து எச்.எம்.எஸ் டைன் எனும் ரோந்துக் கப்பல் மற்றும் ஒரு கடற்படை ஹெலிகொப்டர் ஆகியவை அதைக் கண்காணிக்க அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.