1000 சம்பள அதிகாிப்பு ஒருபோதும் சாத்தியப்படாது, முதலாளிமாா் சம்மேளனம் உறுதிபட கூறியது..

ஆசிரியர் - Editor I
1000 சம்பள அதிகாிப்பு ஒருபோதும் சாத்தியப்படாது, முதலாளிமாா் சம்மேளனம் உறுதிபட கூறியது..

பெருந்தோட்ட மக்களுடைய 1000 ரூபாய் சம்பள உயா்வு கோாிக்கையினை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. என கூறி யிருக்கும் முதலாளிமாா் சம்மேளனம் இனி ஒருபோதும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடாத்தப்போவதில் லை எனவும் உறுதிபட தொிவித்துள்ளது. 

தேட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் என்ற வகையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் முதலாளி மார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் 

ஈடுப்படாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைருவரும் இலங்கைய தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் தலைவருமான ரொஷான் ராஜதுறை தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் 

கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டம் நியாயமற்றது கூட்டு ஒப்பந்தத்தின் பிராகரம் பேச்சு வார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் 

வேலைநிறுத்தத்தில் ஈப்படுவது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.  அத்துடன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு