மன்னாா் மனித புதைகுழியை நோில் பாா்வையிட்டாா் இலங்கைக்கான பிாிட்டன் துாதரக பிரதிநிதிகள்..
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரிட்டன் தூதரக பிரதி நிதிகள் இருவர் இன்று நேரடியாகப் பார்வையிட்டனர்.
மன்னார் மனிதப் புதை குழி அகழ்வுப்பனியானது 115 ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.