செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான ஒலி: - நாசா மையம் தகவல்

ஆசிரியர் - Admin
செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான ஒலி: - நாசா மையம் தகவல்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதிர்வுகள், வெப்ப பரிமாற்றங்கள், நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மே 5ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கிமீ தூரத்தை கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான ஒலி கேட்டதாக நாசா மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் அதிர்வலைகளை இன்சைட் விண்கலம் ஒலியாக பதிவு செய்துள்ளது. அந்த கிரகத்தின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி, 10 முதல் 25 எம்பிஎச் வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளது. இது, மிக சாதாரணமான ஒலி இல்லை என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு