பிரான்ஸில் உச்சத்தை எட்டிய கலவரம்: - ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 1,700 பேர்!

ஆசிரியர் - Admin
பிரான்ஸில் உச்சத்தை எட்டிய கலவரம்: - ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 1,700 பேர்!

அரசை எதிர்த்து ஃபிரான்ஸ் நாட்டில் நடக்கும் கலவரம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு, அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வரி உயர்வை எதிர்த்து, கடந்த 1-ம் தேதியன்று பிரான்ஸின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதில், கலந்துகொண்ட சிலர் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டதால், பொதுமக்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. அந்தக் கலவரத்தில், 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேச அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரூன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், யார் போராட்டத்துக்குக் காரணம், யார் கலவரத்தில் ஈடுபட்டது போன்ற எந்தத் தகவலும் தெரியாமல் அதிகாரிகள் திணறினர்.

மக்களின் போராட்டத்துக்கு முக்கிய காரணமாக எரிபொருள் வரியைத் திரும்ப பெற்றுக்கொள்வதாக ஃபிரான்ஸ் அரசு அறிவித்தும் அரசின் மீது உள்ள மற்ற அதிருப்திகளால் தொடர்ந்து அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஃபிரான்ஸ் நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஃபிரான்ஸ் நகரில் போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்தும் அங்கு பொது மக்களின் போராட்டம் ஓயவில்லை. முன்னதாக போராட்டம் நடத்திய அதே அமைப்பினர் அதே பகுதியில் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர். 

டிசம்பர் 1-ம் தேதி நடந்த போராட்டத்தை விட நேற்று நடந்த போராட்டம் மிகவும் வீரியம் மிக்கதாக இருந்தது. இதில் மொத்தமாக 1,36,000 பேர் கலந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. கணக்கில் அடங்காத வாகனங்கள், பொது சொத்துகள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1,723 பேர் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த போராட்டங்கள் கலவரங்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு