SuperTopAds

ஹூவாவி தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவு ஏற்படும்: - சீனா

ஆசிரியர் - Admin
ஹூவாவி தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவு ஏற்படும்: - சீனா

சீனாவின் ஹூவாவி தொலைதொடர்பு நிறுவன தலைமை நிதி அதிகாரியை விடுவிக்காவிட்டால் கனடா பாரிய விளைவை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளது. 

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக ஹூவாவி தொலைதொடர்பு நிறுவன தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou, கனடாவின் வாங்கூரில் கடந்த முதலாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரை விடுவிக்க வேண்டுமென சீனா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு, இல்லாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென எச்சரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் அச்சுறுத்தலை Meng Wanzhou எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றத்திற்கும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தண்டனை வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.