வெடிகுண்டுகள் காரில் வெடித்ததில் 35 பயங்கரவாதிகள் பலி

ஆசிரியர் - Admin
வெடிகுண்டுகள் காரில் வெடித்ததில் 35 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். 

அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் இராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனால் இராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மற்றும் பொலிஸார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டியுள்ள கந்தஹார் மாகாணம், மருஃப் மாவட்டத்தில் இராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒரு காரில் தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் வெடித்து சிதறியதில் 35 க்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், இந்த தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Radio
×