மன்னார் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படை அடாவடி..
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ள பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை கடற்படையினர் நேற்று மூடியுள்ளனர்.
இதனால் அப்பகுதிகளில் மீள் குடியேறிய மக்கள் இடர்களை எதிர் கொண்டு உள்ளதாக முள்ளிக்குளம் பங்கு தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
முள்ளிக்குளம் கடற்படை முகாமுக்கு அருகால் செல்லும் பிரதான வீதியை கடந்த 21ஆம் திகதி முட்கம்பி வேலி அடைத்து மூடினார்கள்.
அதனால் அப்பகுதி மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டதனால் போராட்டம் நடத்தினோம். அதனால் மீளவும் குறித்த வீதி திறக்கப்பட்டது.
அந்நிலையில் மீண்டும் நேற்று புதன்கிழமை கடற்படையினர் வீதியை மூடியுள்ளனர். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
இதனால் வீதியை திறந்து விட வேண்டும் என கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.