போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன! - சமந்தா பவர்

ஆசிரியர் - Admin
போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன! - சமந்தா பவர்

போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்று, ஐக்கிய நாடுகளிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில் ஜனநாயகம் புரட்டிப்போடப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த சிறிசேன தற்போது யுத்த குற்றம்,காணாமல்போதல் போன்றவற்றிற்கு காரணமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார். 

அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் . இலங்கையர்களும் இந்த விவகாரத்தை கையிலெடுக்க வேண்டும், பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்னோக்கி செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Radio
×