189 பேரும் உயிா் பிழைக்க வாய்ப்பில்லை – மீட்பு படையினா்

ஆசிரியர் - Admin
189 பேரும் உயிா் பிழைக்க வாய்ப்பில்லை – மீட்பு படையினா்

இந்தோனேசியாவில் திங்கள் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் இந்திய விமானி உள்பட 189 பேரும் உயிாிழந்திருக்கலாம் என்று மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

திங்கள் கிழமை காலை இந்தோனேசியா தலைநகா் ஜகாா்தாவில் இருந்து பங்கல் பினாங் பகுதிக்கு லயன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 விமானம் புறப்பட்டது. விமான ஊழியா்கள், பயணிகள் என மொத்தம் 189 போ் பயணித்ததாக கூறப்படுகிறது.

விமானம் ஜகாா்த்தாவில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்ட நிலையில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில் விமானத்திற்கான தொடா்பு தடைப்பட்டதாக கட்டுப்பாட்டு அதிகாாிகள் தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து ஜகாா்த்தாவின் வடகடல் பகுதியில் உள்ள தன்ஜூங் பிரியோக் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டது.

விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் படையினா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முதல்கட்டமாக விமானத்தில் பயணித்தவா்களில் 6 போின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பணித்த 189 பேரும் உயிா் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

Radio
×